நாட்டையே உலுக்கிய மெடிக்கல் டெக்னிக் மர்டர். டாக்டர் மனைவியையே மயக்க ஊசி போட்டு கொலை செய்த கொடூரம். போஸ்ட் மார்ட்டம் அறிக்கையால் அதிர்ந்த குடும்பம். 6 மாதத்தில் மருத்துவ கணவனை அலேக்காக தூக்கி சிறை வைத்த காவல்துறை. செல்போன், லேப்டாப் டேட்டாக்களை அலசி ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள். மருத்துவரின் கொலைக் குற்றத்தை வெளிப்படுத்திய டிஜிட்டல் ஆப். மருத்துவரின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்தது என்ன.?2024, மே 26ஆம் தேதி கல்யாணம். கொஞ்ச நாள்ல மனைவிக்கு ஒடம்பு சரியில்லாம ஆகுது. டிரீட்மெண்ட்ல இருந்த மனைவி திடீர்னு உயிரிழந்துராங்க. அந்த பெண்ணோட மரணம் தொடர்பா ஆறு மாசத்துக்கு அப்புறம் அவங்க கணவன் அரெஸ்ட். கல்யாணமான ஒரே வருஷத்துல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் திருப்பங்களும் நடந்திருக்குறது, அந்த ரெண்டு குடும்பத்துக்கு மட்டுமில்ல, அதையும் தாண்டி மொத்த நாட்டு மக்கள் மத்தியிலயும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திருந்துச்சு. அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாலமே அவங்கள கொஞ்ச கொஞ்சமா சாகடிச்சு கொலை பண்ண கொடூர கணவனோட வில்லத்தனம் ஒவ்வொண்ணா வெளியே வந்து ஷாக்காக வச்சிருக்கு. கர்நாடக மாநிலம், பெங்களூர்ல உள்ள விக்டோரியா மருத்துவமனையில அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் டாக்டரா இருந்தவன் மகேந்திரா. அதே ஹாஸ்பிட்டல ஸ்கின் டாக்டரா வேலை பாத்துட்டு இருந்த கிருத்திகாவ காதலிச்சு, கடந்த 2024 மே 26ஆம் தேதி கல்யாணம் பண்ணிக்கிட்டான். கல்யாணம் முடிஞ்ச சில நாட்கள் மட்டும் கிருத்திகாவ சந்தோஷமா பாத்துக்கிட்ட மகேந்திரா, அதுக்கப்புறம் அவங்க மேல எரிஞ்சு எரிஞ்சு விழுந்துருக்கான். அதுக்கு காரணம் கிருத்திகாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனது. ரத்த அழுத்தமும், அஜீரண பிரச்சனையும் இருக்குறத மறைச்சு, கிருத்திகாவ தனக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்களே-ங்குற கோவம் மகேந்திராவுக்கு வந்துருக்குது. அதனால, வேற கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துருக்கான் மகேந்திரா. ஆனா, மனைவி உயிரோட இருக்கும்போதே எப்படி இன்னொரு கல்யாணம் பண்றதுன்னு யோசிச்ச மகேந்திரா, தன்னோட மருத்துவ அறிவ யூஸ் பண்ணி மனைவி கிருத்திகாவோட கதைய முடிக்க ஸ்டெப் பை ஸ்டெப்பா யோசிச்சு பக்காவா பிளான் போட்டுருக்கான். உடல்நிலை பாதிக்கப்பட்டு மாரத்தஹள்ளியில் உள்ள தன்னோட அப்பா வீட்டுல தங்கி, ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்த மனைவி கிருத்திகாவ, மகேந்திரா தெனமும் போய் கவனிச்சிட்டு வர மாதிரி ஆக்டிங்க் போட்டுருக்கான். தானே, தன்னோட மனைவிக்கு சிகிச்சை அளிக்கிறதா சொல்லி அவங்களுக்கு தடை செய்யப்பட்டPROPOFOL மயக்க மருந்த அடிக்கடி குடுத்திருக்கான். அந்த மயக்க மருந்த கொடுத்ததும் கிருத்திகா, உறுப்புகள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா செயலிழந்து உயிரிழந்துட்டாங்க. மகேந்திரா மனைவிய கொன்னது தெரியக்கூடாது அப்டிங்குறதுக்காக அழுது ஆக்டிங் போட்டுருக்கான். ஆனா, அந்த ஆக்டிங்க எல்லாம் கிருத்திகாவோட அக்கா நிகிதா நம்பல. அதனால, மகேந்திரா மேல தனக்கு சந்தேகம் இருக்குறதா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணாங்க. அதேநேரத்துல, கிருத்திக்காவோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துச்சு. அதுல, கிருத்திக்காவுக்கு தடை செய்யப்பட்ட மயக்க மருந்த அளவுக்கு அதிகமா கொடுத்து கொன்னுருக்காங்க அப்டிங்குறது தெள்ள தெளிவா குறிப்பிட்டுருந்துச்சு. அதோட, மகேந்திராவோட குடும்பமே ஒரு ஃபிராடு குடும்பம்னும், அவரோட அண்ணன் நாகேந்திர ரெட்டி மேல பல மோசடி வழக்கு இருக்குறதாவும், அதே மாதிரி மகேந்திராவுக்கு நெறைய பெண்களோட தொடர்பு இருக்குறதாவும் விசாரணையில தெரியவந்துச்சு. முறையான எவிடென்ஸ கலெக்ட் பண்ண போலீஸ், ட்ரீட்மெண்ட்-ங்குற பேர்ல மனைவிய அணு அணுவா சாகடிச்சு கொலை செஞ்ச மகேந்திராவ அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. அதுல, தடயவியல் நிபுணர்கள் மகேந்திராவோட செல்போன், லேப்டாப்ப கைப்பற்றி ஆய்வு பண்ணதுல அவனோட வில்லத்தனம் ஒவ்வொண்ணா வெளில வந்து அதிரவச்சிருக்குது. ஈவு இரக்கமே இல்லாம காதலிச்சு கல்யாணம் பண்ண கிருத்திக்காவ பிளான் பண்ணி, கொலை பண்ண குற்ற உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லாம, மறுநாளே நாலஞ்சு பொண்ணுங்களுக்கு மெசேஜ் அனுப்பி காதல் பிச்சை கேட்டுருக்கான் அந்த கொடூரன். கிருத்திக்காவ கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் மகேந்திராவோட ரிலேஷன் ஷிப்ல இருந்த பொண்ணுங்க அவன்கிட்ட பேசுறத ஸ்டாப் பண்ணிட்டாங்க. அவங்க எல்லாரையும் தன் பக்கம் கொண்டு வர்றதுக்காகவும், பழைய மாதிரி ரிலேஷன் ஷிப்ல இருக்குறதுக்காக மெசேஜ் பண்ணியிருக்கான். அதாவது, ஹாஸ்பிட்டல தன்னோட வேலை பாத்த பொண்ணு, தெரிஞ்ச பொண்ணுங்கன்னு நாலஞ்சு பேருக்கு, போன்பே, வாட்ஸ் அப், இன்ஸ்டா, டெலிகிராம்னு இப்படி எல்லாத்துலையும் மெசேஜ் பண்ணியிருக்கான். என் மனைவிய உனக்காக தான் கொலை செஞ்சேன், ப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒவ்வொரு பொண்ணுக்கும் மகேந்திரா மெசேஜ் அனுப்பியிருக்கான். அந்த மெசேஜ பாத்த பெண்களும் அவன பிளாக் பண்ணியிருக்காங்க. இதே மாதிரி 2023ல மும்பை சேர்ந்த பொண்ணுகூட மகேந்திரா தொடர்புல இருந்ததும், கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பெண்ண தனிமையில சந்திச்சு என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டு டார்ச்சர் பண்ணதும் தெரிய வந்துருக்கு. என் மனைவி கிருத்திகா சீக்கிரம் செத்து போய்டுவான்னு ஜோசியர் ஒருத்தரு சொல்லியிருக்காரு. என் லவ் உனக்கானது மட்டும்தான், கிருத்திகா கூடிய சீக்கிரம் செத்துடுவா, நீ என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு மனைவி உயிரோட இருக்கும்போதே அந்த பொண்ணுக்கு மகேந்திரா மெசேஜ் பண்ணதும் தெரியவந்துருக்கு. இந்த டேட்டாக்கள அடிப்படையா வச்சு மகேந்திராவோட மொத்த க்ரைம் ஹிஸ்ட்ரியையும் அதிகாரிகள் தோண்டி துருவிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - Nigazhthagavu | அவன விட்டுட்டு வந்துரு, வர்ணித்து மெசேஜ், 14 மணிநேரம் கழித்து வீசப்பட்ட சடலம்