சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் R.N.ரவி கலந்து கொண்டு 4 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொள்ளவில்லை.