மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ள கருப்பு மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம் தான். நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமித்ஷா நேற்று மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தனர். இதற்கு முன்பு சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்தது போல் நேற்று தாக்கல் செய்த சட்டத்தையும் எதிர்ப்போம். திமுக இருப்பது உங்களுக்காகத் தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.