பணி நிமித்தமாக வெளி மாநிலம் சென்றாலும் தாய்மொழியை மறக்க வேண்டாம், ஆனால் இதர இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள மாட்டேன் என்று இருக்கக்கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியில் சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பணி நிமித்தமாக செல்லும் போது, அந்தந்த நாடுகளில் மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது என்றும், டிஜிட்டல் முறையில் அதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளதாகவும் கூறினார்.