Current Trend-க்கு கனெக்ட் ஆகுமா மதகஜராஜாபொங்கல் விடுமுறைய முன்னிட்டு இந்தாண்டு கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட பல படங்கள் வெளியாக இருக்கு.. இந்த படங்களோட பல ஆண்டுகளா கிடப்பில் இருந்த விஷாலின் மதகஜராஜா படமும் வரும் 12-ம் வெளியாகும்னு படக்குழு அறிவித்து இருந்தது. சுந்தர் சி இயக்கிய இந்த படத்துல விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிச்சு இருக்காங்க. பல வருஷம் கழிச்சு வெளியாவதால இப்போதைய டிரெண்டுக்கு படம் இருக்குமா? பார்க்குற பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகுமான்னு ஒருபக்கம் பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், மதகஜராஜா படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்காரு அதுல 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியாகும் 'மதகஜராஜா' குடும்ப எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்னும், தனக்குப் பிடித்த சுந்தர் சி, சந்தானம் கூட்டணியில் உருவான இந்த படத்துல நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காதுன்னும் தெரிவிச்சிருக்காரு.. . ஷாக் கொடுத்த வணங்கான் தயாரிப்பாளர்நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில நடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டு இருந்த நிலையில, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிச்சிருந்துது. இந்நிலையில், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில, வணங்கான் பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி விடாமுயற்சி ரிலீஸ் ஒத்திவைப்பு பத்தி தன்னோட கருத்த தெரிவிச்சிருக்காரு..சமீபத்தில் இவர் அளிச்ச பேட்டியில், அஜித் சார் Strength தெரியாமல் மோதக்கூடாதுன்னு ரொம்பவும் ஓபனா சொல்லியிருக்காரு. அதாவது ஒரு வேளை விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகி இருந்தால் வணங்கான் படத்தை தள்ளி போட்டு இருப்பேன்னு பேசி இருக்காரு. சுரேஷ் காமாட்சி இப்படி கூறியிருப்பது படத்தின் பிரமோஷனுக்காகவா? இல்ல அஜித் ரசிகர்களை கவரவா?ன்னு புரியாம நெட்டிசன்கள் பல விவாதங்கள்ல ஈடுபட்டு வர்றாங்க.. குஷ்பூ இல்லன்னா இவங்கள Choose பண்ணியிருப்பேன்நடிகராவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவுல தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த கலகலப்பு, அரண்மனை மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சுந்தர் சி அளிச்ச பேட்டி ஒன்றுல, ”நான் குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தா நடிகை சவுந்தர்யாவை தான் தேர்ந்தெடுத்திருப்பேன். எனக்கு சவுந்தர்யாவை அந்த அளவுக்கு பிடிக்கும், எனக்கு அவர் மீது அதிகமாக கிரஷ் இருந்தது. சவுர்ந்தயா ஒரு சிறந்த மனிதர். அவரை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது அபூர்வம்னு ரொம்பவும் உருகி உருகி பேசியிருக்காரு..ஷங்கர் சார் தான் எனக்கு Inspirationதமிழ் சினிமாவை பிரம்மாண்டத்தின் மூலமா உலக அளவுல கொண்டு போன பெருமை இயக்குநர் ஷங்கருக்கு இருக்கு.. என்னதான் சமீபத்துல அவர் இயக்கத்துல வெளியான இந்தியன் 2 படுதோல்வி அடைஞ்சாலும் முன்னதா தமிழ் சினிமாவுக்கு அவர் கொடுத்த படங்களையும், யாரும் முயற்சிக்காத பல புதிய முயற்சிகள் மூலமா சினிமா ரசிகர்களுக்கு அவர் தந்த புதுமையான அனுபவத்தையும் அவ்வளவு எளிதா மறந்திட முடியாது..தற்சமயம் ஷங்கர் இயக்கி ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளியால உள்ள நிலையில, பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் பத்தி மற்றுமொரு பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி பேசியுள்ளது ஷங்கர் ரசிகர்கள நெகிழ்ச்சியில ஆழ்த்தியிருக்கு.. இதுதொடர்பா கேம் சேஞ்சர் பட நிகழ்ச்சி ஒன்னுல பேசுன ராஜ மௌலி, “பிரமாண்ட படங்கள் எடுக்க நான் தான் இன்ஸ்பிரேஷன்னு பலரும் சொல்றாங்க.. ஆனா நாங்க அசிஸ்டண்ட் டைரக்டர்களா இருந்த சமயத்துலயே எங்களுக்கெல்லாம் பெரிய இன்ஸ்பிரேஷன்னா ஷங்கர் சார் தான்.. அவர் தான் ஒரிஜினல் கேங்ஸ்டர். பிரமாண்ட படங்களை எடுத்தா மக்கள் படம் பார்க்க வருவாங்கன்னு கான்ஃபிடன்ஸ் கொடுத்ததே அவர் தான்”னு ஷங்கர ரொம்பவும் பெருமைப்படுத்தி பேசியிருக்காரு.. கேம் சேஞ்சருக்காக சம்பளத்தை குறைத்த ஷங்கர்ஷங்கர் இயக்கத்தில ராம் சரண் நடித்துள்ள படம் தான் கேம் சேஞ்சர். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கு. இந்த படம் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போய் வந்த நிலையில், தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால ஷங்கர் இந்த படத்திற்கான சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த படத்திற்காக அவர் வெறும் 35 கோடி ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். இதேபோல நடிகர் ராம் சரணும் இந்த படத்திற்காக தன்னோட சம்பளத்தை குறைத்து கொண்டு வெறும் 65 கோடிரூபாய் மட்டும் வாங்கியதாக சொல்லப்படுது. SK 25 படத்தின் டைட்டில் இதுவாஅமரன் படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் எஸ்.கே.25. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்த சுதா கொங்கரா இயக்கிட்டு வர்றாங்க. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும், முக்கிய கதாபாத்திரங்கள்ல ஜெயம் ரவியும், அதர்வா முரளியும் நடிக்க இருக்காங்க. இந்த படம் சுதா கொங்கராவின் புறநானூறா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து வந்தது. இந்நிலையில், SK 25 படத்திற்கு 1965 என பெயர் வைக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகி இருக்கு. இந்த படத்தை 60 களில் நடந்த உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கும் படி எடுக்கவுள்ளதா கூறப்படுது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுது. விஜய் தேவரகொண்டாவுக்கு ஏப்ரலில் திருமணம்?தெலுங்குல வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடிச்ச போது, அதில் நடிச்ச விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததா சொல்லப்பட்டுச்சு. தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்த நிலையில், கடந்த ஆண்டுல மீண்டும் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் கிசிகிசு இருந்துவந்துச்சு.. இதனை தொடர்ந்து புஷ்பா 2 பட விழாவில நீங்க காதலிக்கிறீங்களான்னு தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, அசால்டா ராஷ்மிகா அது எல்லாருக்கும் தெரிஞ்சுது தானேன்னு பதில் சொல்லி இருப்பாங்க.. இது ஒருபுறம் இருக்க, தான் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக விஜய் தேவரகொண்டா சூசகமாக தெரிவிச்சு இருந்தாரு. இவர்கள் இருவரது புகைப்படங்களும் சமூக வலைதளத்தில வைரலாகிட்டு வரும் நிலையில், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிச்சு இருப்பதாகவும், ஏப்ரல் முதல் வாரத்திலேயே இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.கடந்த கால நினைவுகள்.. SK எமோஷ்னல் நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நேசிப்பாயா படத்தின் மூலம் ஹீரோவா அறிமுகமாக இருக்காரு. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகள்ல வெளியாக இருக்கு. இந்த படத்துல ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிச்சு இருக்காங்க. இந்நிலையில், இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதுல கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் யுவன் சங்கர் ராஜா குறித்து எமோஷ்னால பேசி இருக்காரு. தான் பள்ளி, கல்லூரி நாட்கள்ல அதிகமாக கேட்ட பாடல் அவரோட பாடல் தான்னும், இப்போவும் இவரோட பாடலை கேட்டால் கடந்த காலம் நினைவுக்கு வரும்னும் கூறியிருக்காரு. தொடர்ந்து பேசிய அவர், ஒரு நாள் கார்ல வந்ததுட்டு இருக்கும் போது அவரோ பாடலை கேட்டு எம்மோஷ்னலாகி உடனே யுவன் சங்கர் ராஜாவுக்கு போன் செய்து பேசியதா தெரிவிச்சிருக்காரு.https://www.youtube.com/embed/HO2Aqfax9W0