ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் செட்டிலிருந்து கழுதையை அகற்ற அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சன்மான் கானுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 செட்டில் கழுதையை கட்டிப்போட்டு வைத்திருப்பதால் புகார்கள் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, நிகழ்ச்சியில் விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருப்பதால் பதற்றமடையும் நிலைமைக்கு தள்ளப்படும் என்பதால், கழுதையை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.