பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஏவுகணை நகரம் தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அணுசக்தி திட்டத்தை ஈரான் அரசு கைவிட வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தனது ராணுவ பலத்தை வெளிக்காட்டும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.