கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியில் குடத்திற்குள் தலை சிக்கிய படி அவதிப்பட்ட நாயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். டென்னிஸ் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் தண்ணீர் குடிப்பதற்காக சில்வர் குடத்திற்குள் தலையை விட்ட போது சிக்கியது.