கர்நாடக மாநிலம் ஹாவேரியில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தமக்கு விருப்பமான ஹோட்டல் பெயரை கேட்டதும் உயிர் பிழைத்ததாக கூறப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டம் பங்காபுராவை சேர்ந்த பிஷ்டப்பா குடிமணி என்பவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸில் வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில், அங்கு பார் அப்பா, உனக்கு பிடித்த தாபா ஹோட்டல் என அவரது இளைய மகன் கூறியுள்ளார். உடனே மூச்சை இழுத்து விட்டு உயிர் பிழைத்ததாக கூறப்படும் பிஷ்டப்பாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.