உலகின் மிகப்பெரிய பணக்காரர், தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன உற்பத்தி துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய எலான் மஸ்கின் நிறுவனம் ’டெஸ்லா’. இந்த நிறுவனம், இந்திய சந்தையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கி உள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவில், டெஸ்லா தனது நிலையான வணிகத்தை அமைக்கும் முதலாவது கட்டத்தை எடுத்து வைத்தது. திறப்பு விழா நடந்த சில தினங்களிலேயே, ’டெஸ்லா’ தனது பிரபலமான மாடல் Y மின்சார SUV வாகனத்தின் முதல் டெலிவரியை வழங்கி உள்ளது. முதல் டெலிவரியே, டெஸ்லாவின் இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. ஏனெனில், மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், நேரடியாக டெஸ்லா வாகனத்தை வாங்கிக் கொண்டார். இதன் மூலம், முதல் இந்திய வாடிக்கையாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.மகாராஷ்டிரா மாநில அரசில் போக்குவரத்து துறைக்கு பொறுப்பேற்றுள்ளவர் பிரதாப் பாபுராவ் சர்நாயக். தற்போது சிவசேனா- ஷிண்டே கட்சி சார்பில் ஓவ்லா-மாஜிவடா தொகுதியின் எம்எல்ஏ-வாக இருக்கிறார். Pratap Sarnaik, வெள்ளை நிறத்திலான மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். இதை ஏன் வாங்கினார் தெரியுமா?அவர் சொன்னது இது தான்..."இந்தியாவில் முதல் டெஸ்லாவை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காரை நான் எந்தவொரு சலுகையிலும் பெறவில்லை. முழு தொகையை செலுத்தி இதை நான் வாங்கியுள்ளேன். நான் எனது பேரக்குழந்தையை பள்ளியில் விடுவதற்காக இந்த டெஸ்லா காரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். அவர்களுக்கு இதை பரிசளிக்க போகிறேன். மின்சார வாகனங்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும், பலரும் மின்சார வாகனங்கள் வாங்கி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்"இவ்வாறு பிரதாப் பதிவிட்டுள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தியாவில் நுழைந்ததற்கு பிறகு டெஸ்லா நிறுவனம் எதிர்பார்த்த அளவு அதன் எலக்ட்ரிக் காரை குறைந்த விலைக்கு கொண்டு வரவில்லை. ஏனென்றால், உலகிலேயே, இந்தியாவில் தான் டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், யாரும், டெஸ்லா மாடல் ஒய் காரை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. இதே நேரத்தில், tesla electric car குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, Rear-Wheel Drive கார், மணிக்கு 201 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, பூஜ்ஜியத்தில் 5.9 வினாடிகளில் 100 கிமீ என்ற வேகத்தை எட்டி விடும்.சுமார் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 238 கிமீ வரை பயணிக்க முடியும் என்ற சூப்பர் சார்ஜிங் பேட்டரிகளை கொண்டுள்ளது. Long Range Rear-Wheel Drive கார் மணிக்கு 201 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, பூஜ்ஜியத்தில் 5.6 வினாடிகளில் 100 கிமீ என்ற வேகத்தை எட்டி விடும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 267 கிமீ வரை பயணிக்க முடியும்.இந்த காரின் விலை என்ன தெரியுமா? சுமார் 59 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் முதல் 67 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம், படிப்படியாக இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.