தங்கம் விற்கும் விலைக்கு, தற்போது, சின்ன குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலைமையில், நடுத்தர வர்க்கத்தினர் தவித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில், மொரிசியோ கட்டெலன் (Maurizio Cattelan) என்ற கைவினைக் கலைஞர், 102.1 கிலோ, 18 காரட் தங்கத்தில், டாய்லெட் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதில், உற்று பார்த்தால், முகம் தெரிகிறது. அந்த அளவுக்கு பளபள என்று மின்னக்கூடிய இந்த டாய்லெட், வரும் 18ஆம் தேதி நியூயார்க்கில், ஏலத்துக்கு வரப் போகிறதாம். இந்த ஏலத்துக்கான ஆரம்ப விலையே இந்திய மதிப்பில், 88 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள், ‘இது டாய்லெட் இல்லை, சிம்மாசனம்’, ‘இந்த டாய்லெட்ல Flush பண்ணும்போது தண்ணீர் வருமா இல்லை பணம் வருமா?’ - இவ்வாறெல்லாம் தங்களின் கருத்துகளை கமென்ட் செய்துள்ளனர். இந்த 102.1 கிலோ தங்கத்திலான டாய்லெட் குறித்து, நீங்க என்ன நினைக்கிறீர்கள்... மறக்காம கமென்ட் பண்ணுங்க...