தமிழகத்தில் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகள், அப்பா... அப்பா என கதறும் சத்தம் கேட்கவில்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாட்டில் பேசிய அவர், வெளியே செல்லும்போது பெண்கள் தம்மை அப்பா என அழைப்பதாக முதலமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.