தி.மு.க பவள விழாவையொட்டி சென்னை அண்ணா அறிவாலய கட்டிடம் லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழாவையொட்டியும், திமுகவின் பவளவிழாவையொட்டியும் அண்ணா அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது.அறிவாலய கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள 75 என்ற எண் கொண்ட இலட்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அறிவாலயத்தில், அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் திமுக பவள விழா இலட்சினையை திறந்து வைத்தார்.