யார் என்ன சொன்னாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்து. கூட்டணி முடிவை தேசிய தலைமை தான் அறிவிக்கும் என அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டமாக தெரிவித்தார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் மத்திய அரசு செய்த மாற்றத்தை கண்டித்து சென்னை முகப்பேர் மேற்கிலிருந்து முகப்பேர் கிழக்கு 7H பேருந்து நிலையம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது...அதில் கலந்து கொண்ட பின்னர் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாகவே பூத், மண்டல், மாவட்ட, மாநிலம் என காங்கிரஸ் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், மத்திய அரசின் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் பெருமளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். தேசிய தலைமை தான் அறிவிக்கும்காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி ஏற்கனவே இருப்பது தான். நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடனே இருக்கிறோம் என திட்டவட்டமாக கூறிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தேசிய தலைமை தான் அறிவிக்கும் என உறுதிபட தெரிவித்தார். அது அவர்களது சொந்த கருத்து...திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச கூடாது. யார், யார் என்னென்ன கருத்துகளை கூறினார்களோ அது அவர்களது சொந்த கருத்து தான், அது கட்சியின் கருத்து அல்ல என கூறிய அவர், தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார். Related Link அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்