எத்தனை கட்சிகள் ஒன்றாக களத்தில் நின்றாலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தவறுதலாக கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை, சென்னை ஆலந்தூர் தொகுதியில் இனிப்புகளை வழங்கி கொண்டாடிய பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் இது போன்று தவறுதலாக பேசினார்.