டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில். அதன் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக மீது பழிசுமத்தும் வகையில் பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசியதற்கு உச்சநீதிமன்றம் தனது உத்தரவின் மூலம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக கூறினார்.இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் என்றும், அமலாக்கத்துறை பிளாக் மெயில் ஏஜென்சி போல செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.