விஜய்யை பற்றி பொதுமக்கள் பேசுவதைவிட திமுகவினர் தான் மூச்சுக்கு 300 தடவை விஜய்-விஜய் என பேசுவதாக திமுக எம்.பி. ராஜேஷ்குமார் பேசியது கூட்டத்தில் கலகலப்பை உண்டாக்கியது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெயலலிதாவுக்கு பிறகு பெண்களின் ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பி உள்ளதாக கூறினார்.ஒரு காலத்தில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? என வினவியவர், தற்போது அந்த கட்சியின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் அனைவரும் பொறுப்புடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றார்.