திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல், விரைவில் நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.