திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியது குறித்து புள்ளி விவரங்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இபிஎஸ் பதட்டமடைந்து ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்வதாக அமைச்சர் கே. என். நேரு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திராவிட மாடல் நல்லாட்சி மீது அவதூறு பரப்ப அதிமுக போடும் கணக்குகளை தமிழக மக்கள் தவிடுபொடியாக்குவார்கள் என்றார்.