சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவன் என்பதை குறிப்பிட்டவர், திமுக ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.