மாற்றுத் திறனாளிகளையும் மகிழ்விக்கின்ற அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அணுகு பாதையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கப்படும் என்றார்.