தமிழ்நாட்டில் குலத் தொழிலை அனுமதிக்க மாட்டோம் என சொல்லும் திமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று விஸ்வகர்மா சமுதாயத்தினர் மத்தியில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசமாக பேசும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரத்தில் திருமணம் மண்டபத்தில் அச்சமுதாய மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் விஸ்வகர்மா தொழில் திட்டத்தை தமிழ்நாடு அரசு தமிழகத்தில் அமல்படுத்தவில்லை என்று கூறினார். இந்த திட்டத்தை விஸ்வகர்மா சமுதாயத்தினரே எதிர்ப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.