உறுதியாக உள்ள திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கட்சியின் வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி மற்றும் இலக்கிய அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தனர்.