நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்த நடிகை திவ்யபாரதி தற்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யபாரதி தமிழில் எப்போது நடிப்பார் என இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழில் கதைகளை கேட்டு வருவதாகவும், இரு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.