திருப்பதியில், மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்களைத் தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு, போலீசார் பாடம் புகட்டினர். திருப்பதியில், லீலா மஹால் சந்திப்பு அருகிலுள்ள ஒரு மதுக்கடை அருகே, ஆறு இளைஞர்கள் மது மயக்கத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த பெண்களைத் தொந்தரவு செய்தனர். இதனால் உள்ளூர் மக்கள் மூன்று பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் சாலையிலேயே லத்தியால் வெளுத்து வாங்கினர். அவர்களில் மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், பிடிபட்டவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.