இந்தியா, சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரேசிலில் நடைபெற்ற ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ஐ சந்தித்து பேசினார்.