பலாஷ் முச்சல் ஏமாற்றியதால் தான், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார் என நெட்டிசன்கள் பலரும் பதிவிடத் தொடங்கியுள்ளனர். காரணம், பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் CHAT செய்தது போன்று அண்மையில் வெளியான புகைப்படங்கள் தான். இந்த புகைப்படங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பகிர்ந்த நிலையில், இதுகுறித்த விவாதங்கள் இணையத்தை இரண்டாக்கி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் இடையே நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்றது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் தான் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக முதலில் தகவல் பரவி வந்த நிலையில், பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து, நிச்சயதார்த்தம், திருமண நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து புகைப்படங்கள், ரீல்ஸ்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார் ஸ்மிருதி மந்தனா. இதற்கு அடுத்தபடியாக பலாஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்மிருதியின் தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர் பலாஷ் என்பதால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக பலாஷின் தாய் இதற்கு விளக்கமளித்திருந்த நிலையில், தற்போது வேறு ஒரு புது புயல் கிளம்பியிருக்கிறது. அதுதான் பலாஷ் வேறு பெண்ணுடன் சாட் செய்தது போன்ற புகைப்படம். அந்த சாட்டில் பலாஷ், ஸ்மிருதி மந்தனாவை இக்னோர் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை ஸ்விம்மிங், ஸ்பா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்திருப்பது போல் தெரிகிறது. இந்த புகைப்படங்கள் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு வெளியானதாகவும் சொல்லப்படுகிறது.