சீனாவுடன் டிக்-டாக் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 170 மில்லியன் பயனர்களைக் கொண்ட சமூக ஊடக வீடியோ செயலியான டிக்டாக் செயலியை விற்பனை செய்வது தொடர்பான காலக்கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்த அதிபர் டிரம்ப், இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கலாம் அல்லது அவர் அமெரிக்கா வரலாம் என்றும் கூறினார்.