IPL 2025 ஆண்டிற்கான retension ,RTM பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.அந்த வகையில் பிசிசிஐ தனது தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், வீரர்களை தக்கவைப்பது குறித்து 10 அணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியது. அவர்களில் பெரும்பாலோர் 5-6 வீரர்களைத் தக்கவைக்க விரும்பினர், ஏனெனில் அது அவர்களுக்கு அணியின் தொடர்ச்சியைக் கொடுக்கும் மற்றும் அணிகளின் brand valueக்கு முக்கிய பங்கு வகிக்கும் . அவர்களின் கோரிக்கையை எடைபோட்ட பிறகு பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது ,அதன்படி இம்முறை எந்த அணிக்கும் RTM வழங்கப்படாது என்றும் அணிகள் தங்களது வீரர்களில் 5 பேரை retention செய்துகொள்ளலாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .2022 ல் நடந்த மெகா auction ல் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது அதிலும் (3 இந்தியா வீரர் + ஒரு வெளிநாட்டு வீரர்) அல்லது (2 இந்தியா வீரர் + 2 வெளிநாட்டு) என்ற கணக்கில் மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் ..அந்த வகையில் இந்த முறை 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்றாலும் இந்தியா வீரர்கள் + வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை பிரிவை பற்றி எந்த தகவலும் இன்னும் இல்லை.இந்நிலையில் எந்தந்த அணிகள் யார் யாரை தக்க வைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.குறிப்பாக அனைவரது கவனமும் CSK ,Mi ,RCB பக்கம் திரும்பியுள்ளது.. அதன்படி MI அணி - Jasprit Bumrah, Suryakumar Yadav, Rohit Sharma, Hardik Pandya மற்றும் nuwan thusara வை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது RCB அணி - faf du plesis ,Virat Kohli ,Rajat pattidhar ,siraj ,மற்றும் Will jacks தக்க வைக்க வாய்ப்புள்ளது என்றும் CSK அணி - Ruturaj ,Jadeja ,Shivam Dube , Pathirana மற்றும் Dhoni விளையாட விருப்பம் தெரிவித்தால் முதல் வீரராகவே அவர் தான் தக்க வைக்கப்படுவர் என்று.