தமிழக எம்.பி.க்கள் குறித்து அநாகரீகமாக பேசிய தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி, இப்படி பேசியதற்கான எதிர்விளைவுகளை தர்மேந்திர பிரதான் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும், தமது அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.