பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவரது மகள், மும்பை மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மேந்திரா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில், அவரது மகளும், நடிகையுமான இஷா தியோல், தனது தந்தை சீரான நிலையில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களது குடும்பத் தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.