பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்து பெண்ணை காதலித்ததற்காக இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞரை, வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நரசிங்கபூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிபாரியாவை சேர்ந்த இந்து பெண்ணை காதலித்த நிலையில், திருமணம் செய்வது தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்த போது பெண் வீட்டாரும் இந்து அமைப்பினரும் தாக்கியுள்ளனர்.