ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை பார்க்க ரசிகர்களுக்கு போட்டியாக செலிபிரிட்டிகளும் தியேட்டர்களில் குவிந்த நிலையில் தனுசும்-ஐஸ்வர்யாவும் சேர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிகர் விஜய் சோலோவாக வந்து தேவி தியேட்டரில் படம் பார்த்தது போன்று தனுசும் சோலோவாக வந்து வேட்டையனை பார்த்துவிட்டு சென்றுள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து மனநிலையில் மாற்றம் என்று சொன்னது என்னாச்சு என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றால் சாமானிய மக்களுக்கு மட்டுமா கொண்டாட்டம்? செலிபிரிட்டிகளுக்கும் செம கொண்டாட்டம்தான். அந்தவகையில் வேட்டையன் மட்டும் என்ன விதிவிலக்கா? தியேட்டர்களில் ரசிகர்களோடு ரசிகர்களாக செலிபிரிட்டிகளும் புற்றீசல்போல் குவிந்தனர். தலையில் தொப்பி, முகத்தில் முகமூடி அணிந்து தேவி தியேட்டருக்கு சோலோவாக வந்து நடிகர் விஜய் வேட்டையனை கண்டுகளித்த நிலையில் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நடிகைகள் அதிதி ஷங்கர், ரோகினி, அனிருத் மற்றும் ரஜினியின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுத்தனர். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா டிவோர்சில் இருவரது மனநிலையும் மாறியிருப்பதாக தகவல் வெளியானதால் கடவுள் இருக்கான் குமாரு என ரசிகர்கள் கொள்ளை மகிழ்ச்சியடைந்தனர்.. இந்த சூழலில் வேட்டையனை காண குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்தால் அக்கு அக்காக பிரிந்து வந்தார்கள்..லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் ரஜினியின் பேரன்கள் ஒரு காரில் வந்து இறங்கிய நிலையில் தனுஷ் மட்டும் தனியாக வேறொரு காரில் வந்திறங்கி புன்னகைமலர துள்ளிக்குதித்து தியேட்டருக்குள் சென்றார். வழக்கமாக தான் அமரும் A வரிசையில் அமர்ந்து மூத்த மகன் லிங்காவுடன் அமர்ந்து தனுஷ் படம் பார்க்க தனது தாய் லதா மற்றும் இளைய மகனுடன் அமர்ந்து ஐஸ்வர்யா படம் பார்த்தார். படம் முடிந்தவுடனாவது தனுசும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து காட்சி கொடுப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் ஆளாக வெளியே வந்த தனுஷ் படம் சூப்பர் என கூறிவிட்டு செல்ல, அதன்பின்னர் மகள்களுடன் வந்த லதா வேட்டையன் பார்த்த மகிழ்ச்சியை சிலவார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.