புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் கோடி தீர்த்தம் மூலம் கோவில் அதிகாரிகள் கோடி கோடியாய் கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தர்ப்பணம் கொடுப்பதற்கு புரோகிதர்கள் ஐந்தாயிரம் முதல் லட்ச ரூபாய் வரை அடாவடியாக வசூலிப்பதாகவும், இதற்கு அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.