ராமநாதபுரம் சேதுக்கரை : ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக போற்றப்படும் திருப்புல்லாணி சேதுக்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சுவாமி தரிசனத்திற்கு பின் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி, அங்குள்ள ஆஞ்சநேயர் மற்றும் ஷேத்ர விநாயகர் கோயிலில் வழிபடுவது வழக்கம் என்ற நிலையில் தை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் சேதுக்கரையில் குவிவதும் வாடிக்கை.ஆனால் புனித நீராடும் பெண்கள் உடை மாற்றும் அறை அசுத்தமாக இருப்பதோடு, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.