புரட்டாசி மாதப் பிறப்பை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் உள்ள வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸின் 31 அறைகளும் நிரம்பியதால், வெளியே உள்ள கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு ஏழு மணி நேரமும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மூன்று மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று மட்டும் 63 ஆயிரத்து 67 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் 23 ஆயிரத்து 856 பக்தர்கள் மொட்டையடித்து தலை முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.87 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.