நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் 2-வது முறையாக தள்ளுபடி செய்தது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் 24 கோடியே 50 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உட்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி 5 பேர் மனு தாக்கல் செய்தனர். அப்போது, தேவநாதன் மீது தினமும் புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், விசாரணை இன்னும் நிறைவடையாததால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் போலீஸ் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.