மக்களவை தேர்தல் மூலம் பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை காங்கிரஸ் அழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி, மக்களவை தேர்தலில் இருந்து இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாறியிருக்கிறது என்றதோடு, தற்போதெல்லாம் பிரதமர் மோடி உளவியல் ரீதியான சிக்கலில் சிக்கியிருப்பது அவரை பார்க்கும் போதே வெளிப்படுகிறது என விமர்சித்தார்.பிரதமர் மோடியை தாம் வெறுக்கவோ...எதிரியாகவோ நினைக்கவில்லை என்ற ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தற்போது காங்கிரஸுக்கு இருக்கும் இரண்டு பெரிய சவால்கள் தேர்தலில் போட்டியிடுவதும்,பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ம் இணைந்து நாட்டுக்கு ஏற்படுத்திய சேதத்தை சரிபடுத்துவதும் தான் எனவும் தெரிவித்தார்.