வெள்ளை அறிக்கை குறித்த துணை முதலமைச்சரின் பேச்சு விளையாட்டுத் தனமாக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளித்த நிலையில், உதயநிதி முதிர்ச்சி இல்லாமல் பேசுவதாக சாடினார்.