சென்னை புழுதிவாக்கத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பரிசுப் பொருட்கள் வாங்க முந்தியடித்து சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், அதிகமான பெண்கள் வந்ததால் முண்டியடித்துச் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.