தமிழகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அமைச்சரவை மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு, ஆறு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம், மூன்று அமைச்சர்களின் பதவிபறிப்பு என புதிதாக இருவர் உட்பட நான்கு பேருக்கு அமைச்சர் பதவி என தமிழ்நாடு அமைச்சரவை புதிய மாற்றத்தைக் கண்டுள்ளது.துணை முதலமைச்சர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி இல்லை என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தேவையில்லை. இதுதொடர்பாக சனிக்கிழமை ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு வெளியிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.