தேசிய கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுக்கும் காரணத்தால், கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், கல்வியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்படும் நேரத்தில், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.இது தான் சமமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கான மத்திய பாஜக அரசின் திட்டமா என வினவியுள்ள முதலமைச்சர், அதனை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார்.