பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதால், அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என உள்ளூர் நிா்வாகம் அறிவித்துள்ளது. உயிருடனோ, கொன்றோ கொண்டுவரப்படும் தலா 5 கொசுக்களுக்கு இந்திய மதிப்பில் 1 ரூபாய் 50 காசுகள் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.