டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கையை கண்டித்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள golf club முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். அவர்களின் கை, கால்களுக்கு விலங்கு போட்டு ராணுவ விமானத்தின் மூலம் கடத்தப்படுவதும் சர்ச்சையை கிளப்பியது.