தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறி மத்திய அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை, ஆளுநர் விவகாரம், மத்திய பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.