அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பெரும் பணக்காரர் எலான் மஸ்கை கண்டித்து வாஷிங்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். பின் விளைவுகளை பற்றி அறியாமல் அதிபர் டிரம்ப் முடிவுகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்கள்,மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எலான் மஸ்குக்கு இவ்வளவு அதிகாரத்தை வழங்குவதா என கேள்வி எழுப்பினர்.