இந்தியாவின் டி.என்.ஏவிலும் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கயானா நாட்டின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியா எப்போதும் எல்லையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியதில்லை என்றும், விண்வெளி அல்லது கடல் என எதுவாக இருந்தாலும், அது சர்வதேச ஒத்துழைப்புக்கானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.