மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 15புள்ளி 1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது