டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் அதிகபட்சமாக புது டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.