டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். ஆம் ஆத்மி சார்பில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட கபில் நாகார் தலைமையிலான தொண்டர்கள், பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்